மானாமதுரையில் கடும் பனிப் பொழிவு: வாகன ஓட்டிகள் அவதி

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் நிலவி வரும் கடும் பனிப் பொழிவால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். 
மானாமதுரை பேருந்து நிலையத்தில் காலைப் பொழுதில் நிற்கும் பேருந்துகள் தெரியாதபடி பனிப்பொழிவு காணப்பட்டது.
மானாமதுரை பேருந்து நிலையத்தில் காலைப் பொழுதில் நிற்கும் பேருந்துகள் தெரியாதபடி பனிப்பொழிவு காணப்பட்டது.


மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் நிலவி வரும் கடும் பனிப் பொழிவால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். 

மானாமதுரை, திருப்புவனம் ஆகிய பகுதிகளில் அதிகாலைப் பொழுதில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதற்கிடையில் கடந்த இரு நாள்களாக மானாமதுரை, திருப்புவனம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலைப் பொழுதில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. புகைமூட்டம் போல் காணப்படும் இந்த பனிப்பொழிவால் எங்கு பார்த்தாலும் வெள்ளை நிறமாக காட்சியளிக்கிறது. 

இதனால் இப் பகுதிகளில் சாலைகளில் செல்லும் பஸ், லாரி, வேன், கார் உள்ளிட்ட பல வாகனங்களின் ஓட்டுநர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். எதிரே வரும் வாகனங்கள் தெரியாதவாறு பனிப்பொழிவு உள்ளதால் விடிந்தும் முகப்பு விளக்குகளை வாகனங்களில் எரியவிட்டுச் செல்கின்றனர். 

இன்று சனிக்கிழமை அதிகாலை மானாமதுரை பகுதியில் வழக்கத்தைவிட அதிகமான பனிப்பொழிவு காணப்பட்டது. வைகையாறு, பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் எங்கு பார்த்தாலும் வெள்ளை நிறமாக தெரிந்தது. 

பேருந்து நிலையத்திற்குள் நின்ற பேருந்துகள் நிற்பதுக்கூட தெரியாத நிலை இருந்தது. அதன்பின்னர் கதிரவன் கண் திறந்து பார்த்ததும் மெல்ல மெல்ல பனிப்பொழிவு விலகியது. 

மானாமதுரை பகுதியில் காலையில் நடைபயிற்சி செல்லும் மக்கள் இந்த பனிப்பொழிவு காலநிலை இதமாக உள்ளதாக தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com