‘பேரவைத் தேர்தலே நடக்கும்போது உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது’
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதிக்ககோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டது.


நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதிக்ககோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், கரோனா மூன்றாம் அலை பரவல் இருப்பதால் தேர்தலை தற்போதைக்கு நடத்துவதற்கு தடை விதிக்ககோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது:
உச்சநீதிமன்றம் தேர்தல் நடத்த கெடு விதித்துள்ளதால், எங்கள் கை இந்த வழக்கில் கட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்றம்தான் முடிவெடுக்க முடியும்.
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களே நடைபெறும்போது உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க கோருவது வியப்பாக உள்ளது. தடை விதிப்பது குறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க முடியும்.
மனுதாரர்கள் அனைவரும் உச்சநீதிமன்றம் செல்வதென்றால் செல்லலாம், உயர்நீதிமன்றம்தான் விசாரிக்க வேண்டுமென்றால் விசாரித்து உத்தரவிடத் தயார் எனக் கூறி நாளை அடுத்தக் கட்ட விசாரணை தொடரும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...