
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பு ஓய்வு பெற்ற அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யூ) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் ஓய்வு பெறும் நாளிலேயே அவர்களுக்கான பணப் பலன்களை வழங்க வேண்டும், போக்குவரத்து கழகத் தொழிலாளர்களுக்கு 77 மாத காலமாக வழங்க வேண்டிய அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மதுரை மண்டலச் செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் இதில் திரளாக பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் நிர்வாகிகள் பேசினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.