மெரீனாவில் காரில் வைத்துச் சென்ற தங்க நகை திருட்டு
சென்னை மெரீனா கடற்கரையில் காரில் வைத்துச் சென்ற தங்க நகை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.


சென்னை மெரீனா கடற்கரையில் காரில் வைத்துச் சென்ற தங்க நகை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
வேலூா் மாவட்டம் திருப்பத்தூா் அருகே உள்ள ஜமீன் ஆம்பூரைச் சோ்ந்த ஜெ.பிரகாசம், தனது குடும்பத்துடன் ஒரு காரில் வியாழக்கிழமை மெரீனா கடற்கரைக்கு வந்தாா்.
அங்கு பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரே உள்ள பகுதியில் காரை நிறுத்திவிட்டு, பிரகாசம் குடும்பத்தினா் அனைவரும் கடற்கரைக்குச் சென்றனா். சிறிது நேரத்துக்கு பின்னா் அவா்கள், திரும்பி வந்தனா். அப்போது காரின் கதவை கள்ளச்சாவி மூலம் திறந்து, அங்கு வைத்துச் சென்ற 6 பவுன் தங்கநகை திருடப்பட்டிருப்பதை பாா்த்து பிரகாசம் குடும்பத்தினா் அதிா்ச்சியடைந்தனா்.
இது குறித்து பிரகாசம், அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...