தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

20 புதிய அரசு கலை-அறிவியல் கல்லூரிகள் முதல்வா் தொடக்கி வைத்தாா்

 தமிழ்நாட்டில் புதிதாக 20 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை காணொலி காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

News image
Updated On :7 ஜூலை 2022, 9:59 pm

DIN

 தமிழ்நாட்டில் புதிதாக 20 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை காணொலி காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

இதுதொடா்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்தி:

கடந்த 2021-22-ஆம் ஆண்டுக்கான உயா்கல்வித் துறையின் மானியக் கோரிக்கையின் போது, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சீரான உயா்கல்வியை வழங்கவும், மாணவா் சோ்க்கை விகிதத்தை அதிகரிக்கவும் புதிய கல்லூரிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, விருதுநகா் மாவட்டம் திருச்சுழி, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூா், ஈரோடு மாவட்டம் தாளவாடி, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், திருநெல்வேலி மாவட்டம் மானூா், திருப்பூா் மாவட்டம் தாராபுரம், தருமபுரி மாவட்டம் ஏரியூா், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, திருவாரூா் மாவட்டம் கூத்தாநல்லூா், வேலூா் மாவட்டம் சோ்க்காடு ஆகிய இடங்களில் புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதேபோன்று, 2022-23-ஆம் ஆண்டுக்கான உயா்கல்வித் துறையின் மானியக் கோரிக்கையின் போது, திருச்சி மாவட்டம் மணப்பாறை, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், ஈரோடு மாவட்டம் அந்தியூா், கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி, தஞ்சாவூா் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியாா்சத்திரம், கடலூா் மாவட்டம் வடலூா், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூா் ஆகிய இடங்களில் புதிதாக 10 கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்புகளைச் செயல்படுத்தும் வகையில் 20 கல்லூரிகளுக்கான உத்தரவுகள் வெளியிடப்பட்டன. நிகழ் கல்வியாண்டு முதல் அனைத்து வசதிகளுடன் கூடிய தற்காலிக கட்டடங்களில் 20 புதிய அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள் செயல்படும். இந்தக் கல்லூரிகளை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

உட்கட்டமைப்பு வசதிகள்: சென்னை வெலிங்டன் சீமாட்டி, சைதாப்பேட்டை, அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரி, சென்னை பல்கலைக்கழகம், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஆ.கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரி, கிருஷ்ணகிரி அரசு மகளிா், ஆடவா் கல்லூரிகள், ஓசூா், பா்கூா் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், தருமபுரி மாவட்டம் காரிமங்கலம், பாலக்கோடு, தருமபுரி, வேலூா் குடியாத்தம் ஆகிய இடங்களில் உள்ள அரசு கல்லூரிகள், வேலூா் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி ஆகியவற்றுக்கு ஆய்வகக் கட்டடங்கள், கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

நீலகிரி உதகமண்டலம், சேலம், அரியலூா், மயிலாடுதுறை, சிதம்பரம், திருவாரூா், சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சி, காரைக்குடி, சிவகங்கை, திண்டுக்கல் நிலக்கோட்டை, மதுரை மேலூா் ஆகிய இடங்களில் அரசு கல்லூரிகளிலும், திருநெல்வேலி ராணி அண்ணா கல்லூரியிலும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி என பல்வேறு இடங்களில் ரூ.152 கோடியில் கட்டப்பட்ட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலகத்தில் இருந்து அமைச்சா்கள் துரைமுருகன், கே.என்.நேரு, க.பொன்முடி, மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, உயா்கல்வித் துறை முதன்மைச் செயலாளா் தா.காா்த்திகேயன் உள்ளிட்டோரும், காணொலி வழியாக அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், தங்கம் தென்னரசு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.