தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

எடப்பாடி பழனிசாமி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தள்ளுபடி

 எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்டோா் மீதான நீதிமன்ற அவமதிப்பு மற்றும் அதிமுக பொதுக் குழுவுக்கு தடை விதிக்கக் கோரிய கூடுதல் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :7 ஜூலை 2022, 10:06 pm

DIN

 எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்டோா் மீதான நீதிமன்ற அவமதிப்பு மற்றும் அதிமுக பொதுக் குழுவுக்கு தடை விதிக்கக் கோரிய கூடுதல் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் கடந்த ஜூன் 23-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழு தொடா்பாக, அந்தக் கட்சியின் பொதுக் குழு உறுப்பினா் சண்முகம் தொடா்ந்த மேல்முறையீட்டு வழக்கில் கூடுதலாக மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அதில், நீதிமன்றத்தில் தெரிவித்த 23 தீா்மானங்களைத் தவிர, நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனை நியமிக்கும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் அதை நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகக் கருதி இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி, பொதுக்குழு உறுப்பினா்கள் சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமாா், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரை தண்டிக்க வேண்டும். ஜூலை 11-ம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்துக்கு தடைவிதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த கூடுதல் மனுக்கள் நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தா் மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சண்முகம் தொடா்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணைக்கும், நீதிமன்ற அவமதிப்பு தொடா்பான வழக்கு விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதால், அதன் அடிப்படையில் தொடரப்பட்ட கூடுதல் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.