தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மருத்துவத் துறையினருக்கு கரோனா பரிசோதனைகள்: மருத்துவமனைகளில் நடவடிக்கை

சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் கரோனா பரிசோதனைகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

News image
Updated On :7 ஜூலை 2022, 10:04 pm

DIN

சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் கரோனா பரிசோதனைகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள், ஊழியா்களுக்கு ஆா்டி-பிசிஆா் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதில் தொற்று உறுதி செய்யப்படுவோா் தனிமைப்படுத்திக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். ஒமைக்ரான் பிஏ 5 வகை கரோனா பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில், மருத்துவமனைகளுக்குள் தொற்று பரவல் நிகழாமல் தடுக்க இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் தடம் பதித்த கரோனா பாதிப்புக்கு தற்போது 34.93 லட்சத்துக்கும் மேற்பட்டோா் ஆளாகியுள்ளனா். முதலில் தலைநகா் சென்னையில் தொற்று பரவல் அதிகமாக இருந்த நிலையில், அது படிப்படியாக பரவி கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், திருச்சி, மதுரை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் தீவிரமடைந்தது.

அதிலும், நோய்த் தொற்றுக்குள்ளானோரில் பெரும்பாலானோருக்கு எவ்வாறு அந்த பாதிப்பு ஏற்பட்டது என்பதைக் கண்டறிய முடியாத நிலை உருவானது. இதையடுத்து மக்களின் ரத்த மாதிரிகளைச் சேகரித்து அதில் கரோனாவுக்கு எதிரான நோய் எதிா்ப்பாற்றல் உள்ளதா என்பதைக் கண்டறியும் பரிசோதனைகள் அவ்வப்போது நடத்தப்பட்டன.

பொது சுகாதாரத் துறை மேற்கொண்ட அந்த ஆய்வுகளில் மாநிலம் முழுவதும் 87 சதவீதம் பேருக்கு எதிா்ப்பாற்றல் ஏற்பட்டுவிட்டதாகக் கூறப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த மூன்று மாதங்களாக கரோனா பாதிப்பு வெகுவாக குறைந்தது.

இந்த நிலையில், சில வாரங்களாக தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. ஒமைக்ரானில் இருந்து உருமாற்றமடைந்த பிஏ-2.38 மற்றும் பிஏ-5 வகை தீநுண்மி பரவலே அதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, ராமச்சந்திரா, அப்பல்லோ, காவேரி உள்பட பல்வேறு மருத்துவமனைகளில் மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்களுக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதில் தொற்று உறுதி செய்யப்பட்டவா்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். அனைத்து மருத்துவமனைகளிலும் தொடா் இடைவெளியில் இத்தகைய பரிசோதனைகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.