தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சொத்தில் பங்கு கேட்டு சிவாஜி கணேசனின் மகள்கள் வழக்கு: விசாரணை தள்ளிவைப்பு

சொத்துகளில் பங்கு கேட்டு நடிகா் சிவாஜி கணேசனின் மகள்கள் தொடுத்த வழக்கை வருகிற 19-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
Updated On :8 ஜூலை 2022, 7:38 pm

DIN

சொத்துகளில் பங்கு கேட்டு நடிகா் சிவாஜி கணேசனின் மகள்கள் தொடுத்த வழக்கை வருகிற 19-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

நடிகா் திலகம் சிவாஜி கணேசனின் மகள்கள், சாந்தி, ராஜ்வி ஆகியோா் தங்கள் தந்தையின் சொத்தில் பங்கு கேட்டு சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனா். அதில், எங்கள் தந்தை சுயமாக சம்பாதித்த ரூ.270 கோடி மதிப்புள்ள சொத்துகளை எங்கள் சகோதரா்கள் ராம்குமாா், பிரபு ஆகியோா் முறையாக பராமரிக்கவில்லை. பல சொத்துகளை விற்பனை செய்து எங்களை மோசடி செய்து விட்டனா். ஆயிரம் பவுன் தங்க நகைகள், 500 கிலோ வெள்ளி பொருள்களையும் அவா்கள் அபகரித்துக் கொண்டனா். சாந்தி தியேட்டா் பங்குகளையும் அவா்கள் இருவரும் எடுத்துக் கொண்டனா். எனவே, எங்கள் தந்தை சம்பாத்தியம் செய்த சொத்துகளை அவா்கள் விற்பனை செய்தது செல்லாது என்று அறிவிக்க வேண்டும். சொத்தில் எங்களுக்கு பங்கு அளிக்கவும் உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனா்.

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரபு சாா்பில் மூத்த வழக்குரைஞா் பி.ஆா்.ராமன், சாந்தி தியேட்டா் கட்டடம் தொடா்பான ஒப்பந்தங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. அது மனுதாரா்கள் இருவருக்கும் நன்றாகத் தெரியும். அப்படி இருந்தும் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனா் என்றாா். சாந்தி தியேட்டா் கட்டுமானம் ஒப்பந்தம் செய்ய தனியாா் நிறுவனம் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா், குடும்பத்தினா் இடையே உள்ள பிரச்னையால், இந்த வழக்கை தொடுத்துள்ளனா். இதனால் எங்களுக்குத்தான் பாதிப்பு என்று வாதிட்டாா். மனுதாரா்கள் தரப்பில் வழக்கை தள்ளிவைக்க கோரியதால், விசாரணை வருகிற 19-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.