நாமக்கல் ஈத்கா மைதானத்தில் பக்ரீத் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டிகையையொட்டி நாமக்கல் ஈத்கா மைதானத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
நாமக்கல் ஈத்கா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள்.
நாமக்கல் ஈத்கா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள்.

நாமக்கல்: இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை நாமக்கல்லில் கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி, நாமக்கல் பேட்டை இஸ்லாமிய ஜாமியா பள்ளிவாசல் சார்பில் பக்ரீத் பண்டிகை  சிறப்புத் தொழுகை நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் காலை 8 மணிக்கு நடைபெற்றது.

இத்தொழுகையை பள்ளிவாசல் இமாம் சாதிக் அஷ்ரத் முன்னின்று நடத்தினார். பள்ளிவாசல் முத்தவல்லி  ஹவ்லத் கான் முன்னிலை வகித்தார். இதில்  ஆயிரக்ணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.  

மேலும்,  உலகில் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் அமைதி நிலவ வேண்டும் என்ற வகையிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. தொழுகைக்குப் பின்  இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் கட்டியணைத்து பக்ரீத் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். மேலும் ஏழைகளுக்கு குர்பானி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com