சிப்பாய் புரட்சி நினைவு தினம்

இந்திய நாட்டின் விடுதலைக்கு வித்திட்ட வேலூர் சிப்பாய் புரட்சியின் 216 ஆம் ஆண்டின் நினைவு தினம்  இன்று வேலூரில் அனுசரிக்கப்படுகிறது.
சிப்பாய் புரட்சி நினைவு தினம்
Published on
Updated on
1 min read


இந்திய நாட்டின் விடுதலைக்கு வித்திட்ட வேலூர் சிப்பாய் புரட்சியின் 216 ஆம் ஆண்டின் நினைவு தினம்  இன்று வேலூரில் அனுசரிக்கப்படுகிறது.

இதனையொட்டி வேலூர் கோட்டை எதிரே உள்ள சிப்பாய் புரட்சியை நினைவுத்தூணில்  தமிழக ஆளுநர் R.N ரவி, மலர் வலையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் .

அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் பாண்டியன், காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன்,சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் சிப்பாய் புரட்சியை நினைவுத்தூணில்  மலர்மாலை அமைத்து அஞ்சலி செலுத்தினர்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1806 ஆம் ஆண்டு மதராஸ் படைக்கு தளபதியாக இருந்த சர் ஜான் கிரேடேக் என்பவர் , வேலூர் கோடையில் இருந்த இந்திய சிப்பாய்களுக்கு பல்வேறு அடக்கு முறைகளை கையாண்டார். அதில் குறிப்பாக இந்திய சிப்பாய்கள் காதில் கடுக்கன் அணியக்கூடாது ,சமய சின்னங்களை உடலில் அணிய கூடாது,தாடியை அகற்றிவிட்டு மீசையை வைத்துக்கொள்ள வேண்டும் ,பசுந்தோளால் செய்யப்பட தொப்பிகளை அணிய வேண்டும், மதக்குறிகளை நெற்றியில் இடக் கூடாது, உள்ளிட்ட பல்வேறு அடக்கு முறைகளை கொண்டு வந்தார். இதனால் இந்திய சிப்பாய்கள் மன உலச்சளுக்கு ஆளாக்கப்பட்டனர்,

இதன் காரணமாக ஆங்கிலேயர் ஆட்சியை விழ்த்த வேண்டும் என திட்டமிட்டு வேலூர் கோடையில் 1806  ஆண்டு ஜீலை 10 ஆம் நாள் நள்ளிரவில் ஆங்கிலேய வீரர்களை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.

அப்போது இருதரப்பினருக்கும் ஏற்பட்ட போரில் 900 க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர் .

பின்னர் இந்த கிளர்ச்சி நாடு முழுவதும் பரவியது ,வேலூர் கோட்டையில் ஏற்பட்ட, இந்த முதல் சிப்பாய்  புரட்சியே, நம்  நாட்டின் விடுதலைக்கு வித்திட்ட முதல் சம்பவம் என வரலாற்று சான்றுகள் கூறுகின்றன.  இச்சம்பவம் நினைவாக வேலூர் கோட்டை எதிரே 1998  ஆம் ஆண்டு தமிழக அரசால் நினைவு தூண் அமைக்கப்பட்டு ஆண்டு தோறும் ஜீலை 10ஆம் நாள் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com