தமிழகத்தில் ஒரேநாளில் 2,537 பேருக்கு பாதிப்பு
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 2,537 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.


தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 2,537 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், இன்று புதிதாக 2,537 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 35,01,529-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 804 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க- இலங்கையில் லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் அதிகரிப்பா?
அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 434, திருவள்ளூர் 151, கோவை 119, பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நோய்த்தொற்று பாதிப்பால் புதிதாக உயிரிழப்பு ஏற்படவில்லை. எனினும் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 38,028 ஆக உள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் 2,560 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34,44,682-ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டோா் உள்பட சிகிச்சைப் பெற்று வருவோரின் எண்ணிக்கை 18,819-ஆக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...