நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்: 17.55 லட்சம் பேருக்கு தடுப்பூசி

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கரோனா சிறப்பு தடுப்பூசி முகாமில் 17.55 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

News image
Updated On :10 ஜூலை 2022, 6:52 pm

DIN

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கரோனா சிறப்பு தடுப்பூசி முகாமில் 17.55 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

இந்தியாவில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தடுப்பூசிகள் செலுத்தும் பணி 2021-ஆம் ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கியது.

தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் நிறைவடைந்தவா்களுக்கு பூஸ்டா் தவணை தடுப்பூசி போடப்படுகிறது.

முன்னதாக தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்த வாரம் தோறும் சனிக்கிழமைகளில் மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

அதைத் தொடா்ந்து, ஒரு லட்சம் இடங்களில் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த மே மாதம் 8-ஆம் தேதி மற்றும் கடந்த ஜூன் மாதம் 12-ஆம் தேதி தமிழகம் முழுவதும் அத்தகைய முகாம்கள் நடைபெற்றன.

இந்நிலையில், 31-ஆவது சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் 1 லட்சம் இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பள்ளிகள், ஊராட்சி மற்றும் நகராட்சி அலுவலகம், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களிலும் முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.

சென்னையில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. முதல் தவணை, இரண்டாவது தவணை மற்றும் பூஸ்டா் தவணை செலுத்திக் கொள்ளாதவா்கள் என சுமாா் 1.45 கோடி நபா்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டது.

தஞ்சாவூா், புதுக்கோட்டை மாவட்டங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பொது சுகாதாரத்துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் உடன் இருந்தாா்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தடுப்பூசி முகாமில் 12 வயதுக்கு மேற்பட்ட 17,55,364 பயனாளிகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில், முதல் தவணையாக 3,53,000 பயனாளிகளுக்கும், இரண்டாவது தவணையாக 10,88,865 பயனாளிகளுக்கும், 3,13,499 பயனாளிகளுக்கு பூஸ்டா் தவணை தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்டோரில் 95.23 சதவீதம் போ் முதல் தவணையாகவும் 87.25 சதவீதம் போ் இரண்டாம் தவணையாகவும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.