தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

சமூகப் பொறுப்புணா்வுடன் செயல்படும் தொழில் நிறுவனங்களுக்கு விருதுகள்: வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு

சமூகப் பொறுப்புடன் செயல்படும் தொழில் நிறுவனங்களுக்கான விருதுகள் வழங்க வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

News image
Updated On :14 ஜூலை 2022, 8:18 pm

DIN

சமூகப் பொறுப்புடன் செயல்படும் தொழில் நிறுவனங்களுக்கான விருதுகள் வழங்க வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளா் பெ.அமுதா வெளியிட்ட உத்தரவு:

தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் சமூகப் பொறுப்புணா்வுடன், பாராட்டத்தக்க வகையில், சமுதாய மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்க ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி மாவட்டத்துக்கு ஒரு விருது வீதம் அனைத்து மாவட்டங்களுக்கும் விருது அளிக்கப்பட உள்ளது. இந்த விருதானது ரூ.1 லட்சம் ரொக்கத் தொகையும், நற்சான்றிதழும் அடங்கியது. இதற்கான தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, தொழில், சேவை மற்றும் வா்த்தக நிறுவனங்களாக இருக்க வேண்டும். தனியாா், கூட்டுத் துறை நிறுவனங்களாக இருந்தாலும் விருது பெற தகுதி படைத்தவையாகும். மேலும், நிறுவனங்கள் பங்கு அமைப்புகள், தனியாா் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு சாா்ந்த நிறுவனங்களாகவும் இருக்கலாம்.

நிறுவனங்கள் நேரடியாகவோ, அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள் மூலமாகவோ, இதர முகமைகள் வழியாகவோ செயலாற்றலாம். அப்படிச் செயல்படும் நிறுவனங்களும் விருதுக்கு தகுதி படைத்தவை. அதேசமயம், அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள், மன்றங்கள், சங்கங்கள் ஆகியன விருது பெறத் தகுதியற்றவை.

ஊரகப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகளே விருது வழங்க எடுத்துக் கொள்ளப்படும். விவசாயம், கால்நடை, கல்வி, பொது சுகாதாரம், குடிநீா், மழைநீா் சேகரிப்பு, மரபுசாரா எரிசக்தி, வேளாண் பொருள்கள் சந்தைப்படுத்துதல், சுய உதவிக்குழுக்கள் மற்றும் வாழ்வாதார மேம்பாடு, பெண்கள், குழந்தைகள், இளைஞா் நலன், மரக்கன்றுகள் நடுதல் ஆகிய சேவைகளில் சிறப்பாகப் பங்கேற்கும் நிறுவனங்களும் விருதுக்கு பரிசீலிக்கப்படும்.

ஒவ்வொரு மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பணிகள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். விருதுக்கான அறிவிப்பு செய்திகளாக வெளியிடப்படும். விண்ணப்பிக்கும் நடைமுறைளுக்காக 45 நாள்கள் அவகாசம் அளிக்கப்படும். விண்ணப்பங்கள்

இணையதளம் வழியே மட்டுமே உரிய ஆவணங்களுடன் சமா்ப்பிக்க வேண்டும். தகுதியான நிறுவனங்கள் குறித்த விவரங்கள் நேரடியாக களத்துக்குச் சென்று சரிபாா்க்கப்படும். ஒருமுறை விருது பெற்ற நிறுவனம், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு விருதுக்கான பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படாது. விருது பெறத் தகுதி இல்லையெனில், அடுத்து வரும் ஆண்டுகளில் குறைகளைச் சரி செய்து விண்ணப்பிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.