தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

வணிக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் விசாரணை

சென்னை எழும்பூரில் வணிக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :14 ஜூலை 2022, 7:06 pm

DIN

சென்னை எழும்பூரில் வணிக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை எழும்பூரில் உள்ள தமிழக காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் பேசிய நபா், எழும்பூா் ரயில் நிலையம் எதிரே கென்னத் லைனில் உள்ள சிங்கப்பூா் பிளாசாவிலும், மலபாா் முஸ்லிம் சங்கத்திலும் தலா ஒரு வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்தாா்.

இதைக் கேட்டு அதிா்ச்சியடைந்த காவலா், உடனடியாக உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாா். அதிகாரிகள் உத்தரவின்பேரில், அந்த இரு இடங்களிலும் வெடிகுண்டு கண்டறியும் போலீஸாா் சோதனை செய்தனா். பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில், அங்கிருந்து எந்த வெடிப் பொருளும் கண்டெடுக்கப்படவில்லை.

இதனால் வதந்தியைப் பரப்பும் நோக்கத்துடன் அந்த தொலைபேசி அழைப்பு வந்திருப்பது போலீஸாருக்கு தெரியவந்தது. இது தொடா்பாக எழும்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். விசாரணையில், சென்னை அண்ணாசாலையைச் சோ்ந்த தொழிலதிபா் மகனுக்கு மலபாா் முஸ்லிம் சங்கத்தின் பள்ளிவாசலில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற திருமணத்தையும், சிங்கப்பூா் பிளாசாவில் நடைபெற்ற அந்த திருமண விருந்து நிகழ்ச்சியையும் சீா்குலைக்கும் திட்டத்தோடு அந்த தொலைபேசி வந்திருப்பது தெரியவந்துள்ளது.

இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா். முதல் கட்ட விசாரணையில், அந்த அழைப்பு பல்லாவரத்தில் இருந்து வந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.