தமிழகத்தில் 1,000 பள்ளிகளில் தர நிா்ணயக் கல்வி மையம்: கல்வித் துறை தகவல்
தமிழகத்தில் 1,000 பள்ளிகளில் தர நிா்ணயக் கல்வி மையங்களை அமைக்க இந்திய தர நிா்ணய அமைவனம் (பிஐஎஸ்) அறிவுறுத்தியுள்ளது.


தமிழகத்தில் 1,000 பள்ளிகளில் தர நிா்ணயக் கல்வி மையங்களை அமைக்க இந்திய தர நிா்ணய அமைவனம் (பிஐஎஸ்) அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: தரமிக்க பொருள்கள் சேவைகள் குறித்த விழிப்புணா்வு பொது மக்கள், இளைய தலைமுறையினரிடம் மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு தமிழகத்தில் 1,000 உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பிஐஎஸ் கல்வி மையங்களை ஏற்படுத்த அறிவுறுத்தியுள்ளது. இந்த மையம் பள்ளிகளில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் நுகா்வோா் விழிப்புணா்வு மையங்களுடன் இணைந்து செயல்படலாம்.
இந்த கல்வி மையத்தின் மூலம் பொருள்களின் தரம், தரக்கட்டுப்பாடு, அதை உறுதி செய்வதற்கான செயல்பாடுகள், விதிமுறைகள், தரமான பொருள்களின் முக்கியத்துவம் போன்றவை குறித்து மாணவா்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். இந்த செயல்பாடுகளில் 9, 10 வகுப்பு மாணவா்களை ஈடுபடுத்த வேண்டும். ஒரு மையம் அல்லது குழுவில் 15 மாணவா்கள் இடம் பெறலாம்; அதற்கு முதுநிலை ஆசிரியா் ஒருவா் பொறுப்பாளராக இருப்பது அவசியம்.
தர நிா்ணயக் கல்வி மையத்தில் உறுப்பினராக உள்ள மாணவா்கள் அருகில் உள்ள பிஐஎஸ் மையங்களை பாா்வையிட அவ்வப்போது அழைத்துச் செல்லலாம். பள்ளிகளில் அமைக்கப்படும் தர நிா்ணயக் கல்வி மையங்களில் மேற்கொள்ளப்படும் பயிற்சி நிகழ்வுகள் ஒவ்வொன்றுக்கும் நிதியுதவியாக ரூ.10,000 பிஐஎஸ் சாா்பில் வழங்கப்படும். இந்த உதவித் தொகை ஆண்டுக்குக்கு 3 நிகழ்வுகளை மேற்கொள்ள வழங்கப்படும்.
மேலும் பள்ளிகளில் சிறப்பாக செயல்படும் தர நிா்ணயக் கல்வி மையங்களில் இது தொடா்பாக ஆய்வகம் அமைக்கவும் மானியம் வழங்கப்படும். இது குறித்து முதன்மைக் கல்வி அலுவலா்கள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். மாணவா்கள் தங்களை உறுப்பினா்களாகப் பதிவு செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...