புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு இறுதிப் பட்டியல் வெளியீடு

நேர்காணல் முடிவடைந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்றவர்களின் இறுதிப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

News image
Updated On :15 ஜூலை 2022, 12:47 pm

DIN

நேர்காணல் முடிவடைந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்றவர்களின் இறுதிப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

துணை ஆட்சியர், காவல் துறை துணை கண்காணிப்பாளர், வணிகவரி உதவி ஆணையர் உள்ளிட்ட 66 காலிப்பணியிடங்களுக்கு குரூப் 1 முதல்நிலைத் தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடத்தியது.

கரோனா பரவல் காரணமாக முதன்மைத் தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில்,. கடந்த மார்ச் 4 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை, முதன்மைத் தேர்வு(எழுத்துத் தேர்வு) நடைபெற்றது. 

இதில் தேர்ச்சியானவர்கள் ஜூலை 13, 14, 15 ஆகிய தேதிகளில் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். 

இன்றுடன் நேர்காணல் முடிவடைந்ததையடுத்து குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்றவர்களின் இறுதிப்பட்டியலை https://www.tnpsc.gov.in என்ற தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் இன்று வெளியிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.