செஸ் ஒலிம்பியாட்: ஜூலை 19ல் பிரதமருக்கு நேரில் அழைப்பு
சென்னையில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில், பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்க தமிழக எம்.பி.க்கள் நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளனர்.


சென்னையில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில், பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்க தமிழக எம்.பி.க்கள் வருகிற 19 ஆம் தேதி நேரில் சென்று அழைப்பு விடுக்கவுள்ளனர்.
இந்தியாவில் முதல்முறையாக சென்னை மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.
இந்நிலையில் இதன் தொடக்கவிழாவில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, கரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலினை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி நலம் விசாரித்தார். அப்போது, சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் துவக்கவிழாவில் அவசியம் பங்கேற்க வேண்டும் என்று மோடிக்கு அழைப்பு விடுத்தார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
இதன் தொடர்ச்சியாக, செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பிரதமர் மோடி பங்கேற்க, தமிழக எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, கனிமொழி, விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் வருகிற 19 ஆம் தேதி நேரில் சென்று அழைப்பு விடுக்கவுள்ளனர்.
செஸ் ஒலிம்பியாட்
இந்தியாவில் முதல்முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படவுள்ளது. பெருமைமிகு மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறவுள்ளன.
செஸ் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் ஒருபுறம் நடைபெற்றுவரும் வேளையில், தொடக்க விழா மற்றும் நிறைவு நிகழ்ச்சிகளை பிரம்மாண்ட முறையில் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கென சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அரங்கிலுள்ள அனைத்து கட்டுமானங்களையும் புதுப்பிக்கும் பணிகளில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஈடுபட்டு வருகிறது.
மாமல்லபுரத்தில் நடைபெறும் தொடக்க விழாவில், பிரதமா் நரேந்திர மோடி, முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோா் பங்கேற்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை மாமல்லபுரத்திலும், தொடக்க விழாவை நேரு உள்விளையாட்டரங்கிலும் சிறப்பாக நடத்துவதற்குரிய பணிகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இதையும் படிக்க | செஸ் ஒலிம்பியாட்: டீசர் விடியோவை வெளியிட்டார் ரஜினி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...