செஸ் ஒலிம்பியாட் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன: அமைச்சர் மெய்யநாதன்

மாமல்லபுரத்தில் 44- வது செஸ் ஒலிம்பியாட் பணிகள் 80 சதவீதம் முடிவடைந்துள்ளது என இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன: அமைச்சர் மெய்யநாதன்
Published on
Updated on
1 min read

மாமல்லபுரத்தில் 44- வது செஸ் ஒலிம்பியாட் பணிகள் 80 சதவீதம் முடிவடைந்துள்ளது என இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு த்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் இன்று 44-வது செஸ் ஒலிம்பியாட் நடைபெறவுள்ள மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- முதல்வர் ஸ்டாலின், 44- வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் சிறப்பாக நடத்திட அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளார். போட்டி நடைபெறவுள்ள பூஞ்சேரிக்கு கடந்த 12-. ந்தேதி நேரடியாக வருகைதந்து ஆய்வு மேற்கொண்டு போட்டி சிறப்பாக நடைபெற அனைத்து ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.
இன்று (16.07.2022) போட்டி நடைபெறவுள்ள இடத்தில் உயர் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டுள்ளோம். செஸ் போட்டி நடைபெறவுள்ள இடத்தில் 22 ஆயிரம் சதுர அடியில் உள்ள அரங்கம் 1-ல் 196 செஸ் டேபிள், போர்டுகளும், உலகத்தரம் வாய்ந்த வகையில் 52-ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்பட்டு வருகின்ற பிரமாண்ட அரங்கம் 2- ல் 512 செஸ் டேபிள் , போர்டுகளும் அமைக்கப்பட்டு வருகிறது. அரங்கம் 1- ல் 49 அணிகளும், அரங்கம் 2- ல் 128- அணிகளும் விளையாடுகின்றன.

ஏறத்தாழ ஒரு நாளைக்கு 177 அணிகள் விளையாடுகின்ற இப்போட்டியில் 187 நாடுகளை சார்ந்த வீரர் - வீராங்கனைகள் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விளையாட்டு அரங்கத்தில் தரைதளம், மின்விளக்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது 80 சதவீத பணிகள் முடிவுற்றுள்ளன. போட்டியில் பங்கேற்க வருகை தரவுள்ள வீரர்கள், நடுவர்கள், விருந்தினர்கள் அனைவரையும் தமிழர் பண்பாடு, கலாச்சாரம், விருந்தோம்பல் படி தழிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் வருக, வருக என வரவேற்க காத்திருக்கிறோம் .
நேற்று (15.07.2022) செஸ் போட்டிக்கான டீசர் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். நம் முதல்வர் பங்கேற்றள்ள இந்த டீசர் உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.- எனக்கூறினார்.
இந்த ஆய்வின்போது கதர் கிராம தொழில் முனைவோர் வாரிய தலைமை நிர்வாக அலுவலர் முனைவர் பொ. சங்கர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு
ஆணைய தலைமை செயல் அலுவலர்/ உறுப்பினர் செயலர் மருத்துவர் காப. கார்த்திகேயன் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com