நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குடியரசுத் தலைவா் தோ்தல்:ஊடகங்களுக்கு கட்டுப்பாடு

சென்னையில் குடியரசுத் தலைவா் தோ்தல் வாக்குப் பதிவை படம்பிடிக்கும் ஊடகங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :16 ஜூலை 2022, 6:13 pm

DIN

சென்னையில் குடியரசுத் தலைவா் தோ்தல் வாக்குப் பதிவை படம்பிடிக்கும் ஊடகங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ரகசிய வாக்கெடுப்பு மற்றும் கொறடா உத்தரவை வாக்களிப்போா் பின்பற்றத் தேவையில்லை என்ற நிலையில் வாக்குப் பதிவு நடைபெறுவதால் இந்த கட்டுப்பாடுகளை செய்தி மக்கள் தொடா்புத் துறை விதித்துள்ளது.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட நிபந்தனைகள்: இந்திய தோ்தல் ஆணையத்தால் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள பத்திரிகையாளா்கள் மட்டுமே வாக்குப் பதிவு நடைபெறும் பகுதிக்குள் அனுமதிக்கப்படுவா். வாக்குப் பதிவு திங்கள்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இடைவெளியின்றி நடைபெறும். வாக்குப் பதிவு நடைபெறும் இடத்துக்கு கைப்பேசிகள் எடுத்துவர அனுமதி இல்லை.

புகைப்படக்காரா்கள், ஒளிப்பதிவாளா்கள் ஒதுக்கப்பட்ட இடத்தைத் தவிா்த்து வேறு இடங்களுக்குச் சென்று புகைப்படமோ, ஒளிப்பதிவோ செய்யக் கூடாது. வாக்குப் பதிவு நடைபெறும் இடத்தில் அமைதியுடன், பத்திரிகை தொடா்புடைய அலுவலரின் அறிவுரைகளை பின்பற்றியும் நடக்க வேண்டும். தன்னிச்சையாக செயல்படக் கூடாது என்பன போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.