
திருச்சி: திருச்சி முக்கொம்பை அடுத்த வாத்தலை கிராமத்தில் இருந்து பாசன வசதிக்காக புள்ளம்பாடி வாய்க்காலில் இருந்து சனிக்கிழமை பிற்பகல் தண்ணீர் திறக்கப்பட்டது.
கர்நாடகம், கேரளம் மற்றும் தமிழகத்தின் மழை சார்ந்த மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் முக்கொம்பை அடுத்த வாத்தலை கிராமத்தில் காவிரி ஆற்றின் இடது கரைப்பகுதியில் உள்ள புள்ளம்பாடி வாய்க்காலில் இருந்து தற்போது பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு கலந்து கொண்டு பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தார்.
பாசனத்திற்காக புள்ளம்பாடி வாய்க்காலில் திறந்து விடப்பட்டடுள்ள தண்ணீர்.
திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டத்தில் 56 மைல்கள் அதாவது 90 கிலோ மீட்டர் பயணித்து சுக்கிரன் ஏரியில் இந்த புள்ளம்பாடி வாய்க்கால் கலக்கிறது.
இதன் மூலம் திருச்சி மாவட்டம் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் நேரடியாக 28 குளங்கள் என மொத்தம் 22,114 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
இதையும் படிக்க | மேட்டூர் அணை நிரம்பியது: 16 கண் மதகுகளில் இருந்து நீர் திறப்பு!
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என். நேரு கூறுகையில், கடைமடை வரை தண்ணீர் செல்லவில்லை என்பது தவறான குற்றச்சாட்டு. எல்லா பகுதிகளுக்கும் தண்ணீர் சென்று சேர்ந்துள்ளது என்றார்.
இந்த நிகழ்ச்சியில், ஆட்சியர் மா. பிரதீப் குமார், விவசாய சங்க பிரதிநிதிகள் அய்யாக்கண்ணு, அயிலை சிவசூரியன் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.