கள்ளக்குறிச்சி வன்முறை: கடும் நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கள்ளக்குறிச்சி வன்முறையில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
கள்ளக்குறிச்சி வன்முறை: கடும் நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
Published on
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி வன்முறையில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் குறித்து அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் நடந்த வன்முமுறை தொடர்பாக உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. போராட்டத்திற்கு அனுமதி அளித்தது யார்? வன்முறையில் ஈடுபட்டது யார்? பள்ளி வன்முறையின் பின்னணி என்ன? தூண்டிவிட்டது யார்? வன்முறை தொடர்பாக உளவுத்துறை நடவடிக்கை என்ன? சட்டம், ஒழங்கை கையில் எடுத்துக்கொண்டால் நீதிமன்றம் எதற்கு? நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்? என நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பினார்.
இதையும் படிக்க- ‘திறந்த மனதுடன் விவாதங்களை நடத்த வேண்டும்’: பிரதமர் மோடி

பள்ளியில் நடந்த வன்முறை திடீர் கோபத்தில் வெடித்தது அல்ல. திட்டமிட்ட செயல். வன்முறையில் ஈடுபட்டோர் மீது விடியோ காட்சி மூலம் அடையாளம் கண்டு டிஜிபி நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளியில் வன்முறையில் ஈடுபட்டோரை தனிப்படை அமைத்து அடையாளம் காண வேண்டும். வன்முறையாளர்களை கண்டறிந்து பள்ளியில் ஏற்பட்ட இழப்பை அவர்களிடம் இருந்தே வசூலிக்க வேண்டும். தனியார் பள்ளியில் டிராக்டரை கொண்டு பஸ்சை மோதிய சம்பவமே ஒட்டுமொத்த வன்முறைக்கும் காரணம். மாணவி இறுதிச்சடங்கு அமைதியாக நடக்க வேண்டும் எனவும் நீதிபதி அறிவுறுத்தினார்.

அப்போது, பழைய மாணர்வகளே வன்முறையில் ஈடுபட்டார்கள் என்றும் பேராட்டத்திற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என மாணவியின் தந்தை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. மாணவியின் மரணம் தொடர்பாக முறையான விசாரணை நடைபெறுள்ளது. மாணவியின் தற்கொலைக்கான கடிதம் கிடைத்துள்ளது. வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது என அரசுத்தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. மேலும பள்ளியில் மாணவர்களின் சான்றிதழ்கள் எரிக்கப்பட்டு வாகனங்கள் தீ வைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி சதீஷ்குமார் வழக்கு விசாரணையை 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com