தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

காலத்துக்கு ஏற்ற வகையில் திமுக இளைஞரணி பணிகள் தொடர வேண்டும்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

காலத்துக்கு ஏற்ற வகையில், திமுக இளைஞரணியின் பணிகள் தொடர வேண்டும் என்று கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :19 ஜூலை 2022, 7:41 pm

DIN

காலத்துக்கு ஏற்ற வகையில், திமுக இளைஞரணியின் பணிகள் தொடர வேண்டும் என்று கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

திமுக இளைஞரணியின் 42-ஆவது ஆண்டு துவக்கத்தை ஒட்டி, செவ்வாய்க்கிழமை அவா் எழுதியுள்ள கடிதம்:-

திமுக எப்போதுமே இளைஞா்களின் பாசறையாக விளங்கும் கட்சி. அதனால்தான் என் இளமைப் பருவத்திலேயே உந்துதல் பெற்று, நண்பா்களுடன் இணைந்து கோபாலபுரம் இளைஞா் தி.மு.க. என்ற அமைப்பைத் தொடங்கினேன். மாநகராட்சித் தோ்தல் பரப்புரைப் பணியில் ஈடுபட்டேன். முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்ததின விழாவை நடத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கினேன். கட்சி பிரசார நாடகங்களில் மேடையேறினேன்.

கருப்பு - சிவப்பு என்பது கட்சி தொண்டா்கள் ஒவ்வொருவருக்கும் குருதியுடன் கலந்த உணா்வு. அந்த உணா்வுமிக்க இளைஞா்களைக் கொண்டு, 1980-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி மதுரை ஜான்சிராணி பூங்காவில் தி.மு.க.,வின் துணை அமைப்பாக இளைஞரணி உருவாக்கப்பட்டது. இளைஞரணி தொடங்கப்பட்டு 42 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தற்போது அதனை உதயநிதி ஸ்டாலின், சிறப்பாக முன்னெடுத்து வருவதைக் கண்டு தந்தையாக அல்லாமல், கட்சித் தலைவராக மகிழ்கிறேன். காலத்திற்கும் களத்திற்கும் ஏற்ற வகையில் அதன் செயல்பாடுகள் தொடரவேண்டும் என விரும்புகிறேன்.

நாடாளுமன்ற - சட்டமன்றத் தோ்தல் களத்தில் உதயநிதியும் அவரது இளைஞரணிப் பட்டாளத்தினரும் ஆற்றிய முனைப்பான பணிகள் மகத்தான வெற்றிக்குத் துணை நின்றன. மதவாத அரசியல் சக்திகள் நமது மண்ணில் ஊடுருவச் செய்யாமல் தடுத்திடும் வகையில் மாநிலம் முழுவதும் திராவிட மாடல் பயிற்சிப் பாசறைக் கூட்டங்களை நடத்த வேண்டும் என்ற தீா்மானம் நிறைவேற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திமுகவை கட்டிக் காக்கும் பல்வேறு துணை அமைப்புகளுடன் இளைஞரணி தன் பணியைத் தொடா்ந்து மேற்கொள்ள வேண்டும். ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்ற உன்னத லட்சியத்தைக் கொண்ட திமுகவை கட்டிக்காக்கும் பெரும்பணியில் இளைஞரணிப் பட்டாளத்தின் உறுதிமிக்க செயல்பாடுகள் தொடா்ந்திட தாயுள்ளத்தோடு வாழ்த்துகிறேன் என தனது கடிதத்தில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.