தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

செஸ் ஒலிம்பியாட்: சிறப்புக் குழுக்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து சிறப்புக் குழுக்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை நடத்தினார். 

News image
தலைமைச் செயலர் வெ.இறையன்பு
Updated On :1 பிப்ரவரி 2024, 9:51 am

DIN

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து சிறப்புக் குழுக்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று ஆலோசனை நடத்தினார். 

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற ஜூலை 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை வரலாற்று சிறப்புமிக்க சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. 180க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சுமார் 2,000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இதில் கலந்துகொள்ளவிருக்கின்றனர். இதையொட்டி தமிழக அரசு சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதன் தொடக்கவிழா வருகிற ஜூலை 28 ஆம் தேதி மாலை, சென்னை ஜவாஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது. அதுபோல நிறைவு விழாவும் மிக பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது. 

இந்நிலையில், சென்னை, தலைமைச் செயலகத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை மேற்கொண்டார். செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக அமைக்கப்பட்ட 18 குழுக்களுடன் ஆலோசனை செய்தார். 

போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள், பாதுகாப்பு வசதிகள், தொடக்க விழா ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.