
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை தில்லி செல்லவுள்ளார்.
தில்லியில் நடைபெறும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பிரிவு உபசார விருந்தில் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட திரெளபதி முர்மு வேட்புமனுத் தாக்கலின்போது அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அப்போது பொதுக்குழு கூட்டம் ஏற்பாடு காரணமாக இபிஎஸ் கலந்து கொள்ளவில்லை.
மேலும், கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக இபிஎஸ் தில்லி செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.