
மறைமலை நகரில் இயங்கிவரும் ‘ஃபோர்ட்’ கார் உற்பத்தி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட கடைசி காருக்கு ஊழியர்கள் பிரியாவிடை கொடுத்தனர்.
இந்தியாவில் ‘ஃபோர்ட்’ கார் உற்பத்தி தொழிற்சாலைகள் அகமதாபாத் மற்றும் சென்னை ஆகிய 2 இடங்களில் மட்டுமே இயங்கி வருகின்றன. அதில், நிதி நெருக்கடி மற்றும் நட்டம் காரணமாக செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் ‘ஃபோர்ட்’ கார் உற்பத்தி தொழிற்சாலை வருகிற ஜூலை 31 ஆம் தேதியுடன் மூடப்பட உள்ளது.
இதையும் படிக்க: ஹீரோவின் புதிய ’ரேலி பைக்’ விரைவில் விற்பனை... என்ன விலை?
இந்நிலையில், அங்கு தயாரிக்கப்பட்ட கடைசி காரான ‘எகோ ஸ்போர்ட் எஸ்யுவி (Ecosport SUV)’ காரை ஊழியர்கள் அலங்கரித்து கண்ணீருடன் விற்பனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
26 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இந்தத் தொழிற்சாலை ஆண்டிற்கு 4,44,000 கார்களை உற்பத்தி செய்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.