/

ஹீரோவின் புதிய ’ரேலி பைக்’ விரைவில் விற்பனை... என்ன விலை?

ஹீரோ நிறுவனம் புதிய ’ரேலி பைக்’ வகையிலான 'எக்ஸ்பல்ஸ்’ இருசக்கர வாகனத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

News image
Updated On :22 ஜூலை 2025, 3:26 pm IST

ஹீரோ நிறுவனம் புதிய ’ரேலி பைக்’ வகையிலான 'எக்ஸ்பல்ஸ்’ இருசக்கர வாகனத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

இருசக்கர வாகன உற்பத்தியில் இருக்கும் முன்னணி நிறுவனமான ஹீரோ ஜூலை மாத இறுதியில் ‘எக்ஸ்பல்ஸ் 200 4வி(Xpulse 200 4v)’ என்கிற புதிய வகை பந்தய வாகனத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது.

ஜூலை 22ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை ஹீரோ இணையதளத்தில் இதன் விற்பனை நடைபெறும் என்றும் குறைந்த எண்ணிக்கையிலான வாகனம் மட்டுமே கையிருப்பு இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

சராசரி எடை, தேவைக்கேற்ப சரிசெய்யக்கூடிய பாகங்கள், எல்இடி விளக்குகள் மற்றும் கடினமான மண்பாதைகளிலும் செல்லக்கூடிய வகையிலான டயர்கள் கொண்ட இந்த வாகனத்தின் ஆரம்ப விற்பனை  விலை ரூ.1.52 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.