மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 42 ஆயிரம் கன அடியாக சரிவு

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 42 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது. 
மேட்டூர் அணை
மேட்டூர் அணை

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 42 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது. 

கர்நாடகம் மாநிலம், காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளிலும், கேரளம் மாநிலம் வயநாட்டிலும் மழை தனிந்ததால்  கபினி கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர் வரத்து வெகுவாக குறைந்தது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் நீர் திறப்பு குறைத்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 42 ஆயிரம் கனஅடியாக சரிந்தது.  

அணையில் இருந்து வினாடிக்கு 36 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23 ஆயிரம் கன அடி நீரும் 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 13 ஆயிரம் கன அடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. 

அணையின் நீர் மட்டம் 120.49 அடியாகவும், நீர் இருப்பு 94.25 டி.எம்.சியாகவும் உள்ளது. மழையளவு 19 மி.மீட்டராக பதிவாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com