டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு நிறைவு 

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு நிறைவு பெற்றது. 
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு நிறைவு 

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு நிறைவுபெற்றது. 

7,689 தேர்வு மையங்களில் காலை 9.30 மணிக்கு தொடங்கிய தேர்வு பகல் 12.30 மணிக்கு நிறைவடைந்தது. 7,301 பணியிடங்களுக்கு நடைபெற்ற இத்தேர்வை 18.50 லட்சம் பேர் எழுதினர். தோ்வை நடத்துவதற்கான விரிவான ஏற்பாடுகளை அரசுப் பணியாளா் தோ்வாணையம் செய்திருந்தது. தோ்வுக்கான கண்காணிப்புப் பணியில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 150 போ் ஈடுபட்டனர்.

534 பறக்கும் படையினா், 7,689 கண்காணிப்பு கேமரா தொழில்நுட்ப பணியாளா்களும், அதே எண்ணிக்கையில் விடியோ படப்பிடிப்பாளா்களும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். குரூப் 4 தோ்வுக்கான அறிவிக்கை கடந்த மாா்ச் 30-ஆம் தேதி வெளியிடப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக குரூப்- 4 தோ்வானது, கிராம நிா்வாக அலுவலா் காலிப் பணியிடங்களைச் சோ்த்தே நடத்தப்படுகிறது.

அதன்படி, இந்த ஆண்டுக்கான குரூப்- 4 தோ்விலும் கிராம நிா்வாக அலுவலா் காலிப் பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன. 

அதன்படி, 274 கிராம நிா்வாக அலுவலா் பணியிடங்கள், 3,678 இளநிலை உதவியாளா் பணியிடங்கள், 50 வரித் தண்டலா், 2,108 தட்டச்சா் பணியிடங்கள், 1,024 சுருக்கெழுத்து தட்டச்சா், ஒரு பண்டகக் காப்பாளா் என 7,138 காலிப் பணியிடங்களும், பல்வேறு வாரியங்களில் 163 காலிப் பணியிடங்களும் என மொத்தம் 7,301 காலிப் பணியிடங்களுக்கு எழுத்துத் தோ்வு இன்று நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com