'கனியாமூர் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்'

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் கலவரம் ஏற்பட்ட தனியார் பள்ளி மாணவர்களுக்கு வரும் 27ஆம் தேதி முதல் இணையவழியில் வகுப்புகள் நடத்தப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ்
'கனியாமூர் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்'

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் கலவரம் ஏற்பட்ட தனியார் பள்ளி மாணவர்களுக்கு வரும் 27ஆம் தேதி முதல் இணையவழியில் வகுப்புகள் நடத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். 

கனியாமூர் பள்ளி மாணவர்களின் கல்வி தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டார். 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசியதாவது, கனியாமூரில் கலவரம் ஏற்பட்ட தனியார் பள்ளி மாணவர்களுக்கு 
புதன்கிழமை முதல் இணையவழியில் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

தற்போது மூடப்பட்டுள்ள பள்ளிக்கு அருகிலேயே 3க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால், அந்தப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

அருகில் உள்ள பள்ளிகளுக்கு அழைத்துச் செல்வதற்காக பேருந்து ஏற்பாடும் செய்யப்படும். பெற்றோர் - ஆசிரியர் கழகம் சார்பில் அனைவரின் கருத்துக்களும் கேட்கப்பட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டார். 

மேலும், கனியாமூர் தனியார் பள்ளியில் பயின்ற மாணவர்கள் வேறு எந்த பள்ளியில் பயில விருப்பம் தெரிவித்தாலும், அவர்களுக்கு சிறப்பு அனுமதி அளிக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com