மூத்த பத்திரிகையாளர் பி.எஸ். சுந்தர் காலமானார்

மூத்த பத்திரிகையாளரும், குன்னூர் நீலகிரி கலாசார சங்கத்தின் தலைவருமான பி.எஸ். சுந்தர் (68) செவ்வாய்க்கிழமை இரவு காலமானார்.
மூத்த பத்திரிக்கையாளர் பி.எஸ்.சுந்தர்
மூத்த பத்திரிக்கையாளர் பி.எஸ்.சுந்தர்
Published on
Updated on
1 min read

குன்னூர்: மூத்த பத்திரிகையாளரும், குன்னூர் நீலகிரி கலாசார சங்கத்தின் தலைவருமான பி.எஸ்.சுந்தர் (68) செவ்வாய்க்கிழமை இரவு காலமானார்.

நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் பகுதியில் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளராக கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்தவர் பி. எஸ். சுந்தர். இவர் குன்னூரில் உள்ள தென்னிந்திய தேயிலை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தகவல் தொடர்பு அலுவலராகப் பணியாற்றியவர். நீலகிரி கலாசார சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்தி வந்துள்ளார். வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் கௌரவ விரிவுரையாளராகவும், கோத்தாரி வேளாண் பயிற்சி மையத்தில் நிரந்தர விரிவுரையாளராகவும் பணியாற்றியவர். 

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக பி. எஸ். சுந்தர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தவர் செவ்வாய்க்கிழமை இரவு 10.50 மணியளவில் காலமானார்.

இவருக்கு சியாமளா என்ற மனைவி உள்ளார். 

இவரது இறுதி சடங்குகள் குன்னூர் ரெய்லி வளாகத்தில் உள்ள அவரது இல்லத்தில் பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது. பின்னர் வெலிங்டன் ராணுவ வீரர்கள் பயிற்சி மையம் அருகில் உள்ள மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது 

இவரது ஒரே மகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உடல் நலக்குறைவு காரணமாக இறந்து விட்டார்.

தொடர்புக்கு:  அவரது சகோதரர் ராஜாராம் 94434 36551

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com