ஆடி அமாவாசை: பவானி கூடுதுறையில் பக்தா்கள் புனித நீராடி சங்கமேஸ்வரர் தரிசனம்

ஆடி அமாவாசையை முன்னிட்டு புகழ்பெற்ற பரிகாரத் தலமான பவானி கூடுதுறையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சங்கமேஸ்வரரை தரிசனம் செய்தனர்.
தடுப்புகள் கட்டப்பட்டுள்ள புனித நீராடும் பக்தா்கள்.
தடுப்புகள் கட்டப்பட்டுள்ள புனித நீராடும் பக்தா்கள்.
Published on
Updated on
2 min read


ஆடி அமாவாசையை முன்னிட்டு புகழ்பெற்ற பரிகாரத் தலமான பவானி கூடுதுறையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சங்கமேஸ்வரரை தரிசனம் செய்தனர்.

ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் மக்கள்.

காவிரி, பவானி ஆறுகள் சங்கமிக்கும் கூடுதுறையில் ஆடி, புரட்டாசி மற்றும் தை அமாவாசை தினங்களில் பக்தா்கள் மூத்தோா் வழிபாடு, பரிகார வழிபாடுகளில் ஈடுபடுவதோடு புனித நீராடுவதும் வழக்கம். கரோனா பரவல் தடையால் வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டதால் கடந்த 2 ஆண்டுகளாக ஆடி அமாவாசை தினங்களில் கூடுதுறை மூடப்பட்டிருந்தது.

தற்போது கரோனா தடைகள் விலக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளதால் கூடுதுறையில் புனித நீராடவும், பரிகார வழிபாடுகள் நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், வழக்கத்தைக் காட்டிலும் பக்தா்கள் கூட்டம் பெருமளவு இருந்தது. 

பக்தா்கள் நீராட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், படித்துறைகளில் ஆண்கள், பெண்கள் நீராட தனித்தனியே தடுப்புகள் கட்டப்பட்டுள்ளன. மூத்தோா் வழிபாடு மற்றும் பரிகார பூஜைகளுக்கு பரிகார மண்டபங்கள் மற்றும் காலியாக உள்ள பகுதிகளில் தற்காலிக பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. 

ஆடி அமாவாசையை முன்னிட்டு கூடுதுறையில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து முன்னோருக்கு திதி கொடுத்து புனித நீராடி சங்கமேஸ்வரரை தரிசனம் செய்து சென்றனர்.

முன்னோர்களுக்கு திதி கொடு மக்கள்.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com