கோயிலுக்கு சாமி கும்பிட சென்ற அண்ணன், தம்பி மின்சாரம் பாய்ந்து பலி

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கோயிலுக்கு சாமி கும்பிட சென்ற அண்ணன், தம்பி இருவரும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனா்.
கோயிலுக்கு சாமி கும்பிட சென்ற அண்ணன், தம்பி மின்சாரம் பாய்ந்து பலி


திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கோயிலுக்கு சாமி கும்பிட சென்ற அண்ணன், தம்பி இருவரும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனா்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம் அத்தாணி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் அரவா (60), மாரிமுத்து (58). சகோதரா்களான இருவரும் வியாழக்கிழமை அருகிலுள்ள கருப்புக் கோயிலில் சாமி கும்பிட வந்தனா். அப்போது கோயிலருகே உள்ள மின்கம்பத்தின் ஸ்டே கம்பி அறுந்து தரையில் கிடந்துள்ளது. அதனை மிதித்த மாரிமுத்துவும், அவரைக் காப்பாற்ற முயன்ற அரவானும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்து வந்த மண்ணச்சநல்லூா் போலீஸாா் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்தனர் என கூறினர். 

இதுகுறித்து தகவல் அறிந்த மணணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து உடற் கூறு ஆய்விற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

மின்சாரம் தாக்கி அண்ணன் தம்பி இருவரும் உயிரிழந்தது அப்பகுதியில் உள்ள மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com