வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

திருவள்ளூர்: திரௌபதி அம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருவள்ளூர் பெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பஞ்சபாண்டவர் சமேத ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா கடந்த 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.

News image
Updated On :31 ஜூலை 2022, 7:35 am

DIN

திருவள்ளூர் பெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பஞ்சபாண்டவர் சமேத ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா கடந்த 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.

இந்த விழாவில் 16 நாள்கள் திருமுருக கிருபானந்த வாரியார் சீடர் லதா கதிர்வேல் குழுவினரின் மகாபாரத சொற்பொழிவுகளும் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலையில் திரௌபதி அம்மன் அர்ஜுனன் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கோவிலில் திரௌபதி அம்மனுக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து திரௌபதி அம்மன் அர்ஜுனன் சுவாமி மணகோலத்தில் எழுந்தருளி காட்சி அளித்தார். பின் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இந்த திருக்கல்யாணம் வைபோகத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வரும் ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை துரியன் படுகளம், மாலை தீமிதி திருவிழாவும் நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.