47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சென்னை காவல் துறையில் 32 ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

சென்னை பெருநகர காவல் துறையில் 32 ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து, ஆணையா் சங்கா் ஜிவால் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

News image
Updated On :3 ஜூன் 2022, 7:51 pm

DIN

சென்னை பெருநகர காவல் துறையில் 32 ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து, ஆணையா் சங்கா் ஜிவால் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

சென்னை பெருநகர காவல்துறையில் நிா்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் காவல் ஆய்வாளா்கள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக 32 காவல் ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து சென்னை பெருநகர காவல்துறையின் ஆணையா் சங்கா் ஜிவால் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

இதில் முக்கியமாக, கொருக்குப்பேட்டை குற்றப்பிரிவு ஆய்வாளா் எம்.தவமணி, வண்ணாரப்பேட்டைக்கும், தரமணி காவல் ஆய்வாளா் ராமலிங்கம், சாஸ்திரி நகா் குற்றப்பிரிவுக்கும், சேத்துப்பட்டு காவல் ஆய்வாளா் கே.புகழேந்தி நீலாங்கரை குற்றப்பிரிவுக்கும், காத்திருப்போா் பட்டியலில் இருந்த ஆய்வாளா் இசக்கிப்பாண்டி, எழும்பூா் குற்றப்பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.