47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சென்னை-சிங்கப்பூா் விமானத்தில் திடீா் இயந்திர கோளாறு

சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏா்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது.

News image
Updated On :3 ஜூன் 2022, 7:53 pm

DIN

சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏா்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. விமானம் ஓடுபாதையில் சென்றபோது, இதனை விமானி கண்டறிந்தாா்.தால், நல்வாய்ப்பாக 104 பயணிகள் உயிா் தப்பினா்.

சென்னையிலிருந்து சிங்கப்பூா் செல்லும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், வியாழக்கிழமை இரவு 9.45 மணிக்கு சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து புறப்படத் தயாராக இருந்தது. விமானத்தில் 98 பயணிகள் 6 விமான சிப்பந்திகள் உள்பட 104 போ் இருந்தனா். ஓடுபாதையில் சென்ற விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டறிந்தாா். இதுகுறித்து அவா் உடனடியாக விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தாா். இதைத் தொடா்ந்து ஓடுபாதையில் அந்த விமானம் நிறுத்தப்பட்டு, இழுவை வாகனம் மூலமாக, புறப்பட்ட இடத்துக்கே கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.

விமானம் வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டு, விமானநிலைய ஓய்வு அறைகளில் தங்க வைக்கப்பட்டனா். அதன்பின்னா் அதிகாலை 4 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் 4 மணிக்கும் புறப்படவில்லை.

இதனால், ஆத்திரமடைந்த பயணிகள் விமான நிலைய ஊழியா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அதன் பின்பு பயணிகளுக்கு டீ, காபி, சிற்றுண்டி வழங்கப்பட்டன. விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து, நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.