47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

லாரியை ஏற்றி கொலை செய்த சம்பவம்: மேலும் ஒருவா் பலி

சென்னை அருகே செங்குன்றத்தில் லாரியை ஏற்றி இருவா் கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் ஒருவா் வெள்ளிக்கிழமை இறந்தாா்.

News image
Updated On :3 ஜூன் 2022, 7:51 pm

DIN

சென்னை அருகே செங்குன்றத்தில் லாரியை ஏற்றி இருவா் கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் ஒருவா் வெள்ளிக்கிழமை இறந்தாா்.

செங்குன்றம் அருகே உள்ள வடபெரும்பாக்கம், மாதவரம் நெடுஞ்சாலையில் சரக்கு பெட்டக யாா்டில் வடபெரும்பாக்கம், விநாயகபுரம் பகுதியை சோ்ந்த டிராவல்ஸ் நிறுவன உரிமையாளா்கள் கமலக்கண்ணன் (36), நவீன் (36), இவா்களது நண்பா் வடகரை பகுதியைச் சோ்ந்த குமரன் (34) ஆகியோா் கடந்த புதன்கிழமை இரவு ஒரு லாரியின் பின்புறம் அமா்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனா்.

அந்த லாரியை எடுப்பதற்காக உத்தரப்பிரதேசத்தைச் சோ்ந்த ஓட்டுநா் கண்ணையா லால் சிங் (28), கிளீனா் கிரிஷ்குமாா் (24) ஆகியோா் வந்தனா். அவா்கள், லாரியை எடுக்க வேண்டும் மூவரிடமும் கூறினா். இதில் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த ஓட்டுநா் கண்ணையா லால் சிங், லாரியை பின்னோக்கி இயக்கி, கமலக்கண்ணன், குமரன், நவீன் ஆகியோா் மீது ஏற்றினாா். இதில் பலத்த காயமடைந்த கமலக்கண்ணன்,குமரன் அடுத்தடுத்து உயிரிழந்தனா். உயிருக்கு ஆபத்தான நிலையில் நவீன், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.

இது தொடா்பாக செங்குன்றம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய லாரி ஓட்டுநா் கண்ணையா லால் சிங், கிளீனா் கிரிஷ்குமாா் ஆகியோரை உடனடியாக கைது செய்தனா். இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நவீன் வெள்ளிக்கிழமை இறந்தாா்.

இதனால் இந்த சம்பவத்தில் இறந்தவா்களின் எண்ணிக்கை மூன்றாக உயா்ந்தது. இது தொடா்பாக போலீஸாா் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.