யூடியூபர் கார்த்திக் கோபிநாத் கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

யூடியூபர் கார்த்திக் கோபிநாத் தனிப்பட்ட கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டள்ளது.
யூடியூபர் கார்த்திக் கோபிநாத் கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
Published on
Updated on
1 min read

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் அருள்மிகு மதுரகாளி அம்மன் திருக்கோயிலில் செயல் அலுவலராக இருப்பவர் தா.அரவிந்தன். இவர் ஆவடி காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: 

ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை, சபி நகர், 3 ஆவது தெரு சேர்ந்தவர் கார்த்திக் கோபிநாத் (33). இவர் இளைய பாரதம் என்ற பெயரில் யூடியூப் சமூக வலைத்தளம் நடத்தி வருகிறார். இவர் மிலாப் ஃபண்ட் ரைசேர் சைட் என்ற தளம் மூலமாக சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலின் உப கோவில்களில் உள்ள பழுதடைந்த சிலைகளை புனரமைப்பதாக பொதுமக்களிடம் இருந்து ரூ. 44 லட்சம் நிதி திரட்டியுள்ளார். இதற்கு அவர் இந்து சமய அறநிலையத்துறையிடம் முறையான அனுமதி பெறவில்லை. 

மேலும், கார்த்திக் கோபிநாத் அந்தப் பணத்தை தனது சுய லாபத்திற்காக பயன்படுத்திக் கொண்டுள்ளார். எனவே, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.  

இதனையடுத்து குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கார்த்தி கோபிநாத்தை தேடி வந்தனர். இந்நிலையில், தனிப்படை போலீஸார் கார்த்திக் கோபிநாத்தை கைது செய்தனர்.

இந்நிலையில், கார்த்திக் கோபிநாத் தரப்பில், அவர் எந்த முறைகேடும் செய்யவில்லை என்றும், வசூல் செய்தபணத்துக்கு தான் முழுவதுமாக கணக்கு வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். 

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அவருடைய தனிப்பட்ட கணக்கு விவரங்களை சம்பந்தப்பட்ட காவல்துறைக்கு அளிக்கவேண்டும் எனவும், அதனை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் ஜூன் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com