இந்த நீரை முகத்திற்கு பயன்படுத்தினால் இளமையாக பிரகாசிக்கலாம்!

இந்தியாவில் பாரம்பரிய உணவு தான் அரிசி. அந்த அரிசி  நீரானது (rice water), இந்தியாவின் பல பகுதிகளில் அழகு பராமரிப்பில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நீரை முகத்திற்கு பயன்படுத்தினால் இளமையாக பிரகாசிக்கலாம்!

இந்தியாவில் பாரம்பரிய உணவு தான் அரிசி. அந்த அரிசி  நீரானது (rice water), இந்தியாவின் பல பகுதிகளில் அழகு பராமரிப்பில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் சருமம், கூந்தல் போன்றவற்றைப் பராமரிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அரிசி நீர், இப்போது அழகு சாதன துறையில் அதிகம் பேசப்படும் பொருளாக இருக்கிறது. 

1. முதுமையைத் தடுக்கும்

அரிசி நீர் முதுமையைத் தடுக்கும். இதில் அமினோ அமிலங்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.  தோலானது வயதான தோற்றத்திற்கு காரணமான எலாஸ்டேஸ் என்ற நொதியின் செயல்பாட்டை அரிசி நீர் தடுக்கிறது. அரிசி நீரில் முகம் கழுவலாம். இவ்வாறு தினமும் செய்து வர என்றும் இளமையாக இருக்கலாம்.

2. சருமத்தை பிரகாசமாக்கும்

அரிசி நீரின் முக்கிய செயல்பாடுகளில் ஒன்று சருமத்தை பிரகாசமாக்குவதும், சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும், தெளிவாகவும் வைத்திருக்கும். அத்துடன் பருக்கள் ஏற்படாமலும் தடுத்திடும். தளர்ந்திருக்கும் சருமத்தை இருக செய்திடும்.

3. கூந்தலின் நீளத்தை அதிகரிக்கும்

அரிசி  நீரில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால், அழகு சார்ந்த பல பிரச்னைகள் தடுக்கப்படுகிறது. இந்த நீர் கூந்தலின் நீளத்தை அதிகரித்து, முடி பாதிப்பை தடுப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

4. உடலுக்கு தேவையான பலம் கிடைக்கும்

அரிசி நீருடன் சாதாரண நீரை சேர்த்து குழந்தைகளை குளிப்பாட்ட பயன்படுத்தலாம். இது அவர்களுக்கு சரும நோய்கள் வராமல் தடுப்பதுடன் நல்ல தூக்கத்தையும் ஏற்படுத்தும். அரிசி நீரை சூடு செய்து அந்த தண்ணீரை கொண்டு குழந்தைகளின் கால்களை பிடித்து ஊற்றவும். உடல் முழுவதும் குளிக்க வைப்பதால் உடலுக்கு தேவையான பலம் கிடைக்கும். இதனால் விரைவாக கால்களுக்கு பலம் கிடைத்து குழந்தைகள் நடக்கும். இவை இன்றும் கிராமபுறங்களில் பின்பற்றி வருகின்றனர்.

5. உடலுக்கு ஆற்றல் கிடைக்கும்

அரிசி கழுவிய நீர் அழகை அதிகரிக்க மட்டுமின்றி, அதனைக் குடித்தால், உடலின் ஆற்றலும் அதிகரிக்கும். ஏனெனில் இதில் கார்போஹைட்ரேட்டுகளும், மற்ற ஊட்டச்சத்துக்களும் வளமாக நிறைந்துள்ளது. இதனை குடிப்பதன் மூலம் உடலுக்கு ஆற்றல் கிடைக்கும்.


அரிசி நீரை தயாரிக்க இரு முறைகள் உள்ளது

1. ஊறவைக்கும் முறை

1 கப் அரிசியை 2-3 கப் தண்ணீருடன் ஒரு பாத்திரத்தில் 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். அரிசியை வடிகட்டி, ஒரு பாத்திரத்தில் தண்ணீரைச் சேகரித்து குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.

2. வேகவைத்த முறை

1 கப் அரிசியை சமையலுக்கு வழக்கமாகப் பயன்படுத்தும் தண்ணீருடன் வேகவைக்கவும். மாவுச்சத்துள்ள தண்ணீரை ஒரு பாட்டிலில் வடிகட்டி, குளிர்சாதனப் பெட்டியில் சேமித்து வைப்பதற்கு முன் முழுமையாக ஆறவிடவும்.

தோலுக்கு  அரிசி நீரை எவ்வாறு பயன்படுத்துவது 

முகத்தில் அரிசி நீரை பயன்படுத்த, முதலில் அதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் சேமித்து வைக்கவும். அரிசி நீரை பயன்படுத்துவதற்கு முன்பு முகத்தை சுத்தம் செய்யவும். இப்போது, அரிசி நீரை நேரடியாக உங்கள் முகத்தில் டோனராக பயன்படுத்தலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com