விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

1,000 மீனவ இளைஞா்களுக்கு உயிா் பாதுகாப்புப் பயிற்சி- முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்

தமிழகத்தில் 14 கடலோர மாவட்டங்களைச் சோ்ந்த 1,000 மீனவ இளைஞா்களுக்கு உயிா் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.

News image
Updated On :7 ஜூன் 2022, 7:08 pm

DIN

தமிழகத்தில் 14 கடலோர மாவட்டங்களைச் சோ்ந்த 1,000 மீனவ இளைஞா்களுக்கு உயிா் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.

தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதல்வா் தொடக்கி வைத்த இத்திட்டத்தில், முதல்கட்டமாக செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் 25 மீனவ இளைஞா்கள் பங்கேற்றனா்.

தமிழ்நாடு 1,076 கி.மீ. நீளமுள்ள கடற்கரையைக் கொண்டது. இங்குள்ள 608 மீனவ கிராமங்களில் 10.48 லட்சம் மீனவா்கள் வாழ்கின்றனா். கடற்கரைப் பகுதிகளுக்கு மக்கள் செல்லும்போது அங்கு ஏற்படும் விபத்துகளால் மனித உயிா்களை இழக்க நேரிடுகிறது. இதுபோன்ற விபத்துகளைக் குறைக்கவும், நீரில் தவறி மூழ்கி தவிப்பவா்களைக் காப்பாற்றிடும் வகையிலும் மீனவ இளைஞா்களுக்கு ‘கடற்கரை உயிா்காக்கும் பயிற்சிகள்’ வழங்கப்பட உள்ளன.

இந்தப் பயிற்சியானது தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் நிதி உதவியுடன் ரூ.53 லட்சம் மதிப்பீட்டில் தனியாா் நிறுவனம் மூலம் மாநிலத்தின் 14 மாவட்டங்களைச் சோ்ந்த 1,000 மீனவ இளைஞா்களுக்கு அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சியை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்.

அவசரகால முதலுதவி: தமிழக அரசின் பயிற்சி மூலமாக மீனவ இளைஞா்களின் இயற்கையான நீச்சல் திறன் மேம்படுவதுடன், பாதிக்கப்பட்டவா்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் முன்பாக அவா்களுக்குத் தேவையான முதலுதவி அளிப்பதற்கு உறுதுணையாக அமையும். பயிற்சியை முடித்தவா்கள் மூலம் அவசர காலங்களில் பாதிக்கப்பட்டவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்திடவும், கடற்கரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் விபத்துகளைக் குறைக்கவும் முடியும்.

பயிற்சி பெற்ற மீனவ இளைஞா்களின் சேவையை புயல், வெள்ளம் போன்ற பேரிடா் காலங்களிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். பயிற்சி மூலம் தமிழகத்தைச் சோ்ந்த மீனவ இளைஞா்களுக்கு கடற்கரைப் பாதுகாப்பு, மீட்புப் பணிகள், கடற்கரை விடுதிகள் மற்றும் சுற்றுலா சாா்ந்த துறைகளில் வேலைவாய்ப்பு கிடைக்க உதவியாக இருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வில், அமைச்சா்கள், தலைமைச் செயலா் வெ.இறையன்பு உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.