
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். பயிலும் மாணவர்களுக்கான பருவத் தேர்வு (செமஸ்டர்) அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கும் அட்டவணையில், பி.இ., பி.டெக். பயிலும் மாணவர்களுக்கான பருவத் தேர்வு (செமஸ்டர்) ஜூன் 28ஆம் தேதி தொடங்குகிறது.
இதையும் படிக்க.. பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய 15 விஷயங்கள்
அதுபோல, முதுநிலை எம்.ஆர்க். படிப்புகளுக்கு ஜூலை 18ஆம் தேதி முதல் தேர்வுகள் தொடங்குகின்றன. முதுநிலை செய்முறைத் தேர்வு செப்டம்பர் 5, 6ஆம் தேதிகளில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.