
மதுரை: மதுரை மாவட்டம் அய்யங்கோட்டை ஆரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று காலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை சென்றிருக்கும் அமைச்சர் மா. சுப்பிரமணியன், மதுரை வாடிப்பட்டி அருகே அய்யங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் இன்று காலை ஆய்வு நடத்த சென்ற போது, அங்கே ஏராளமான நோயாளிகள் காத்திருந்தனர்.
இதையும் படிக்க.. பி.எஃப். கணக்கில் எவ்வளவு இருக்கிறது? வீட்டிலிருந்தே அறியலாம்
ஆனால், ஆரம்ப சுகாதார மையத்தில், பணி நேரத்தில மருத்துவர் பூபேஸ்குமார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இல்லாததால் அமைச்சர் கடும் அதிர்ச்சி அடைந்தார். வழக்கமாகவே, மருத்துவர் 2 மணி நேரம் தாமதமாகத்தான் வருவதாகக் கூறி அங்கிருந்தவர்கள் அமைச்சரிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து, பணி நேரத்தில் மருத்துவமனையில் இல்லாத மருத்துவர் பூபேஸ்குமார் மீது நடவடிக்கை எடுக்குமாறு, மதுரை மாவட்ட பொது சுகாதாரத் துறை இயக்குநருக்கு அமைச்சர் உத்தரவு பிறப்பித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.