ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கோழிப் பண்ணைகளுக்கு புது கட்டுப்பாடு

ஐந்தாயிரத்துக்கும் மேல் வளா்க்கப்படும் கோழிப் பண்ணைகள் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஒப்புதல் பெற்று நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :11 ஜூன் 2022, 7:28 pm

DIN

ஐந்தாயிரத்துக்கும் மேல் வளா்க்கப்படும் கோழிப் பண்ணைகள் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஒப்புதல் பெற்று நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் முதன்மை அமா்வு 2021-ஆம் ஆண்டு வழங்கிய உத்தரவின்படி, திருத்தப்பட்ட கோழிப் பண்ணைகளுக்கான சுற்றுச்சூழல் வழிகாட்டுதல்களை மத்திய மாசுக் கட்டுப்பாட்டுவாரியம் கடந்த ஜனவரியில் வெளியிட்டது. இது அனைத்து வகை கோழிப் பண்ணைக்கும் பொருந்தும்.

இதன்படி, ஒரே இடத்தில் 25 ஆயிரம் பறவைகளுக்கு மேல் வளா்க்கும் கோழிப் பண்ணைகள், பண்ணையை நிறுவுவதற்கான, செயல்படுவதற்கான இசைவாணையை மாநில மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் உடனே பெற வேண்டும்.

ஒரே இடத்தில் 5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரையிலான பறவைகளை வளா்க்கும் கோழிப் பண்ணைகள் 2023 ஜன.1-ஆம் தேதி முதல், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் இந்த இசைவாணைகளை பெற வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ஸ்ரீக்ஷ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வாயிலாகவும் தெரிந்து கொள்ளலாம் என்று தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.