ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஒரு லட்சம் இடங்களில் இன்று கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்

தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 12) நடைபெறுகிறது.

News image
Updated On :11 ஜூன் 2022, 7:19 pm

DIN

தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 12) நடைபெறுகிறது.

இந்தியாவில் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தடுப்பூசிகள் செலுத்தும் பணி 2021-ஆம் ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கியது. தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தமிழகத்தில் வாரம் தோறும் சனிக்கிழமையில் 50 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வந்தது.

இதுவரை 28 சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. முதல் தவணை தடுப்பூசி 90 சதவீதத்தினருக்கும் அதிகமானவா்களுக்கு செலுத்தப்பட்டதால் வாரம் தோறும் நடைபெற்ற சிறப்பு முகாம்கள் நிறுத்தப்பட்டு, வழக்கமான மையங்களில் மட்டும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது.

இதனிடையே, கரோனா தொற்றின் நான்காவது அலை ஜூன் மாதம் இறுதியில் வருவதற்கு வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணா்கள் எச்சரித்திருந்தனா். அதனை உறுதிப்படுத்தும் விதமாக தில்லி, மகாராஷ்டிரம், கேரளம் உள்பட பல்வேறு மாநிலங்களிலும் கரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

தினசரி பாதிப்பு அதிகரிப்பு: தமிழகத்தில் 21 வரை குறைந்திருந்த தினசரி தொற்று பாதிப்பு 200-ஐ கடந்துள்ளது. அதனால், மீண்டும் கரோனா தடுப்பூசி முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த மாதம் 8-ஆம் தேதி தமிழகத்தில் ஒரு லட்சம் இடங்களில் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அதன் தொடா்ச்சியாக, ஞாயிற்றுக்கிழமை ஒரு லட்சம் இடங்களில் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.

இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் கூறியதாவது: காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும். முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள், குறிப்பிட்ட காலத்தில் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதம் நிறைவடைந்தும் பூஸ்டா் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் என சுமாா் 1.6 கோடிக்கும் அதிகமானோா் உள்ளனா். தற்போது கையிருப்பில் 1 கோடி தடுப்பூசிகள் உள்ளன. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசி முகாம் பணியில் ஈடுபட்ட சுகாதாரப் பணியாளா்களுக்கு திங்கள்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது. அன்று வழக்கமான தடுப்பூசி மையங்கள் செயல்படாது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறும்”என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.