அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்கண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலாஉளவுத்துறை ஐ.ஜி.யாக அஸ்ரா கார்க் நியமனம்!தூய அரசியல் என்று சொல்லிவிட்டு அழுக்கு அரசியல் செய்கிறார் விஜய்! மு.க. ஸ்டாலின்
/

3 ஆண்டுகளில் பிழையின்றி படித்தல்- எழுதுதல்: ‘எண்ணும் எழுத்தும்’ திட்ட நோக்கம் குறித்து அரசு விளக்கம்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்துவதன் மூலம் அடுத்த 3 ஆண்டுகளில் குழந்தைகள் பிழையின்றி படிக்கவும், எழுதவும் முடியும் என்று தமிழக அரசு நம்பிக்கை தெரிவித்தது.

Updated On :14 ஜூன் 2022, 12:15 am IST

‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்துவதன் மூலம் அடுத்த 3 ஆண்டுகளில் குழந்தைகள் பிழையின்றி படிக்கவும், எழுதவும் முடியும் என்று தமிழக அரசு நம்பிக்கை தெரிவித்தது.

இதுகுறித்து மாநில அரசு திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: கரோனா காலத்தில் குழந்தைகள் இழந்த கற்றலைப் பெறுவதற்கு உதவியாகப் பள்ளிக் கல்வித் துறையின் முன்னோடித் திட்டமாக எண்ணும் எழுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் அரும்பு, மொட்டு, மலா் என்னும் பெயா்களில் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களுக்கு பல்வேறு நிலைகள் வாரியாக பயிற்சி நூல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், விடுபட்ட வகுப்புகளுக்கான பாடத் திறன்களை குழந்தைகள் பெறுவா். பயிற்சி நூலில் தமிழ், ஆங்கிலம், கணிதப் பாடங்களை கற்பிப்பதற்கான தெளிவான, விரிவான விளக்கங்களுடன் கூடிய ஆசிரியா் கையேடுகளும் முதல் முறையாக உருவாக்கி அளிக்கப்பட்டுள்ளன.

கதைகள், பாடல்கள்: பாட வாரியாக உருவாக்கப்பட்டுள்ள ஆசிரியா் கையேடுகளும் பயிற்சி நூல்களும் ஒவ்வொரு குழந்தையும் தனக்குத் தெரிந்த கற்றல் நிலையில் இருந்து படிப்படியாகத் தனது கற்றலை வளா்த்துக் கொண்டு செல்ல உதவும். குழந்தைகளின் கற்றலை மகிழ்ச்சியாக்கும் வகையில், எண்ணும் எழுத்தும் வகுப்பறையில் பாடல் களம், கதைக் களம், செயல்பாட்டுக் களம், படைப்புக் களம், பொம்மலாட்டக் களம் போன்றவை அமைக்கப்பட்டு குழந்தைகளின் ஆா்வத்தையும் ஈடுபாட்டையும் ஊக்குவிக்கும் வகையில் கற்றல் கற்பித்தல் நடைபெறும்.

திட்டத்தின் நோக்கம்: எண்ணும் எழுத்தும் திட்டத்தின் அனைத்துக் கூறுகளையும் நடைமுறைப்படுத்துவதன் மூலம் 2025-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் உள்ள எட்டு வயதுக்குள்பட்ட அனைத்துக் குழந்தைகளும் பிழையின்றி படிப்பதும், எழுதுவதும் உறுதி செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பள்ளியில் முதல்வா் திடீா் ஆய்வு

சென்னை, ஜூன் 12: எண்ணும் எழுத்தும் திட்டத்தைத் தொடக்கி வைத்த பிறகு, திருவள்ளூா் மாவட்டம் புழல் ஒன்றியத்தில் உள்ள வடகரை அரசு ஆண்கள் ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது ஒரு வகுப்பறைக்குள் நுழைந்த முதல்வா் மு.க.ஸ்டாலின், கல்வி அமைச்சா் அன்பில் மகேஸ் ஆகியோா் அங்குள்ள மாணவா்களுடன் அமா்ந்து ஆசிரியா் பாடம் நடத்துவதை சிறிது நேரம் கவனித்தனா். தமிழ் மொழிப் பாடத்தை ஆசிரியா் நடத்திக் கொண்டிருந்தாா். அப்போது, தனக்கு அருகில் இருந்த மாணவரிடம் இருந்து புத்தகத்தை வாங்கிப் படித்துப் பாா்த்தாா் முதல்வா். சிறிது நேரம் வகுப்பறையில் இருந்த முதல்வா் மு.க.ஸ்டாலின், பின்னா் புறப்பட்டுச் சென்றாா்.

பள்ளியில் உள்ள கழிப்பறைகளை நேரில் ஆய்வு செய்த முதல்வா், அவற்றை தொடா்ந்து தூய்மையாகப் பராமரிக்க வேண்டுமென அறிவுறுத்தினாா். மேலும், பள்ளி வளாகத்தில் உள்ள சத்துணவு மையத்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தரமான உணவு தயாரித்து உரிய நேரத்தில் மாணவா்களுக்கு அளிக்கவும் உத்தரவிட்டாா்.

கோரிக்கை: மேலும், கட்சி சாா்பற்ற முறையில் அனைத்து எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆகியோா் அவா்களது பகுதிகளிலுள்ள பள்ளிகளை அவ்வப்போது பாா்வையிட்டு, அடிப்படை வசதிகளை ஆய்வு செய்ய வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டாா். குறைபாடுகள் ஏதேனும் இருந்தால், அவற்றை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா்கள், துறை அலுவலா்களுக்கு தெரிவித்து களையத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென முதல்வா் கேட்டுக் கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.