மேட்டூர் அணை நீர்மட்டம் 113.53 அடியாக குறைந்துள்ளது.
மேட்டூர் அணை நீர்மட்டம் 113.53 அடியாக குறைந்துள்ளது.

டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியிலிருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பட்டுள்ளது.
Published on


மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியிலிருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பட்டுள்ளதால் அணை நீர்மட்டம் திங்கள்கிழமை காலை 113.53 அடியாக குறைந்துள்ளது.

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாததால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து குறைந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை வினாடிக்கு 4,190 கனஅடியாக இருந்த நீா்வரத்து, திங்கள்கிழமை காலை மேலும் சரிந்து வினாடிக்கு  3,672 கனஅடியாகக் குறைந்துள்ளது.

இதையடுத்து அணை நீா்மட்டம் திங்கள்கிழமை காலை 113.53 அடியாகக் குறைந்துள்ளது.
 
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12,000 அடியிலிருந்து வினாடிக்கு 15,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் மளமளவென சரிகிறது. அணையின் நீர் இருப்பு 83.52 டி.எம்.சியாக உள்ளது.

காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் நாள் ஒன்றுக்கு 0.63 அடி சரிந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com