உதவி தேவைப்படுவோருக்கு விரைவாக ரத்தம் வழங்கும் வகையில் ‘கமல்ஸ் பிளட் கம்யூனி’ என்ற பெயரில் புதிய திட்டத்தை மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கட்சியின் தலைமை அலுவலகத்தில் துவக்கி வைத்தார்.
நாற்பது ஆண்டுகளாக தனது நற்பணி இயக்கம் மூலமாக நடந்த இத்திட்டம் கட்சியின் ஒரு பணியாக இன்று விரிவு படுத்தப்பட்டது.
நிகழ்வில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
முதற்கட்டமாக சென்னையில் மட்டும் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தின் மூலம் இரத்தம் பெற விரும்புவோர், இரத்ததானம் செய்ய விரும்புவோர், தொடர்புகொள்ள வேண்டிய செல்லிடப்பேசி எண் 9150208889 அறிவிக்கப்பட்டது.
முன்னதாக, இது குறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டிருந்த அறிக்கையில்: உலக ரத்த தான தினம் வருகிற செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்படுகிறது. இதைமுன்னிட்டு மக்கள் நீதி மய்யம் சாா்பாக, தமிழகம் முழுவதும் ஆங்காங்கே ரத்த தானம் வழங்கும் நற்பணி இயக்க நண்பா்களை ஒருங்கிணைத்து, உதவி தேவைப்படுவோருக்கு விரைவாக ரத்தம் வழங்கும் வகையில் ‘கமல்ஸ் பிளட் கம்யூனி’ என்ற பெயரில் புதிய திட்டம் தொடங்கப்படவிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.