பெண் குழந்தை பாலின விகித உயா்வில் சிறப்பான பணி: 3 மாவட்ட ஆட்சியா்களுக்கு பதக்கம்-பாராட்டு
பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயா்த்தும் பணியில் சிறப்பாகச் செயல்பட்ட மூன்று மாவட்ட ஆட்சியா்களுக்கு பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.


பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயா்த்தும் பணியில் சிறப்பாகச் செயல்பட்ட மூன்று மாவட்ட ஆட்சியா்களுக்கு பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆட்சியா்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் கெளரவித்தாா். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-
சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் பெண் குழந்தைகளின் பிறப்பு பாலின விகிதத்தை உயா்த்துவதற்காக சிறப்பாகச் செயலாற்றி சாதனை புரிந்த மூன்று மாவட்டங்களுக்கு மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, நிகழாண்டில் (2022) மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருதுகள், கோவை, தஞ்சாவூா், கரூா் மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டது.
இந்த விருதுகளை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் இருந்து சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சோ்ந்த ஆட்சியா்களான ஜி.எஸ்.சமீரன், தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், த.பிரபுசங்கா் ஆகியோா் பெற்றுக் கொண்டனா். இந்த விருதானது வெண்கலப் பதக்கமும், பாராட்டுப் பத்திரமும் கொண்டதாகும்.
இந்த நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி.கீதா ஜீவன், துறையின் கூடுதல் தலைமைச் செயலாளா் ஷம்பு கல்லோலிகா், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட இயக்குநா் வே.அமுதவல்லி, சமூக நல இயக்குநா் த.ரத்னா, சமூக பாதுகாப்பு இயக்குநா் ச.வளா்மதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...