ஆவினில் வேலை வாய்ப்பு: நல்ல அறிவிப்பினை வெளியிட்டார் அமைச்சர் சா.மு. நாசர்

தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தில் 1000 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று நாமக்கல்லில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் அறிவித்துள்ளார்.
நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பேசும் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர்.
நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பேசும் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர்.


நாமக்கல்: தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தில் 1000 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று நாமக்கல்லில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் அறிவித்துள்ளார்.

நாமக்கல்லில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் சா.மு. நாசர், தமிழகத்தில், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மாவட்டங்களில் விரைவில் ஆவின் கூட்டுறவு ஒன்றியங்கள் அமைக்கப்படும்.

தமிழகம் முழுவதும் ஆவின் நிறுவனத்தில் சுமார் 1000 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அறிவித்துள்ளார். தமிழகத்தில் நோட்டாவைக் கூட பாஜகவால் விஞ்ச முடியாது என்றும் நாசர் குறிப்பிட்டார்.

நாமக்கல்லில் சனிக்கிழமை பல்வேறு பால் உற்பத்தி தொடர்பான இடங்களிலும் அமைச்சர் நாசர் ஆய்வு மேற்கொண்டார். 

இதனைத்தொடர்ந்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி கூட்டரங்கில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பால்வளத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 9 ஆயிரத்து 354 பால் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. 21 லட்சம் விவசாயிகள் அங்கத்தினராக இருக்கின்றனர். நாளொன்றுக்கு 42 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு கோடி பசுமாடுகளும், 5 லட்சம் எருமை மாடுகளும் உள்ளன. 

கடந்த ஆட்சியில் தீபாவளி பண்டிகையை ஒட்டி ரூ. 50 கோடிக்கு இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டன. திமுக ஆட்சி பொறுப்பேற்ற முதல் ஆண்டில் அதனை ரூ. 81 கோடியாக உயர்த்தியது. வரும் தீபாவளியையொட்டி ரூ.250 கோடிக்கு இனிப்புகள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம்.

பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்து வரும் 27ஆம் தேதி நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் முதல்வர் முடிவு செய்தார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டில் உண்மை இல்லை. ஹெல்த் மிக்ஸ் என்ற பொருள் தற்போது ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது. அதற்குள்ளாக அதில் முறைகேடு நடந்திருப்பது என்று கூறுவது தவறான தகவலாகும் என்றார்.

நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பேசும் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com