தமிழகத்தில் மீண்டும் கரோனா கட்டுப்பாடுகள்: எந்த மாவட்டத்தில் தெரியுமா?

கரோனா நோய்த் தொற்று வேகமாக பரவி வரும் சூழலில், மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ. குமாரவேல் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் மீண்டும் கரோனா கட்டுப்பாடுகள்: எந்த மாவட்டத்தில் தெரியுமா?
Published on
Updated on
1 min read

கரோனா நோய்த் தொற்று வேகமாக பரவி வரும் சூழலில், மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ. குமாரவேல் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் கரோனா நோய்த் தொற்று மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 692 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வேலூரில் 21 பேர் கரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், கரோனா கட்டுப்பாடுகளை மீண்டும் அமலுக்கு கொண்டு வந்துள்ள வேலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தியில்,

  • முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது.
  • பொது இடங்களில் 6 அடி தூரம் இடைவெளிவிட்டு நிற்க வேண்டும்.
  • பெரிய வணிக வளாகங்களில் குளிர்சாதன உபகரணம் பயன்படுத்த தடைவிதிக்கப்படுகிறது.
  • திருமண மண்டபங்களில் பொதுமக்களின் எண்ணிக்கை 100 நபர்கள் மட்டுமே இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • இறப்பு வீடுகளில் 50 நபர்களுக்கு மேல் இருத்தல் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com