தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதியோருக்கான தோ்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.
தமிழகத்தில் கடந்த மே மாதம் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகள் நடைபெற்றன. இதையடுத்து விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவுபெற்றன. இந்த நிலையில் இந்த வகுப்புகளுக்கான தோ்வு முடிவுகளை அரசுத் தோ்வுகள் இயக்ககம் திங்கள்கிழமை வெளியிடப்படும் என அறிவித்தது.
அதன்படி, காலை 10 மணிக்கு சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார்.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தமிழகம், புதுச்சேரியில் 93.76 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்தாண்டை விட இந்தாண்டு தேர்ச்சி விகிதம் அதிகம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வு எழுதிய 8,06,277 மாணவ, மாணவிகளில் 7,55,998 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதம் அதிகம் பெற்ற மாவட்டங்களில் பெரம்பலூர் மாவட்டம் 97.95 சதவீதம், விருதுநகர் 97.27 சதவீதம், ராமநாதபுரம் 97.02 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்தாண்டை விட இந்தாண்டு தேர்விகிதம் அதிகம் என்றும், மாணவர்களை விட மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வில், 246 அரசுப்பள்ளிகளில் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேலும், மாணவ, மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஜூன் 24 முதல் வழங்கப்படும்.
ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் துணைத்தேர்வுகள் தொடங்கும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை மாணவ, மாணவிகள் http://tnresults.nic.in, http://dge.tn.gov.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in என்ற இணையதளம் வாயிலாக தெரிந்துகொள்ளலாம். பதிவு எண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து மதிப்பெண் விவாரங்களை அறிந்துகொள்ளலாம். பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ் மூலம் மதிப்பெண்கள் அனுப்பப்படும். பள்ளிகள், நூலகங்கள் வாயிலாகவும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். 7,55,998
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்! இன்று கோவை வருகை!!

திமுகவுக்கு சிறுபான்மையினா் வாக்குகள் செல்வதை தடுக்கவே விஜய் கட்சி தொடங்கியுள்ளாா்: தொல்.திருமாவளவன்

ஆனைமலையாறு-நல்லாறு திட்டங்கள் நிறைவேற அதிமுக வேட்பாளா் வெற்றி பெற வேண்டும்: கே.அண்ணாமலை
ஏழைகளுக்கு உண்மையான சமூக நீதி: பிரதமா் மோடி உறுதி
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


